2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சட்டசபையை புறக்கணிக்கிறது அ.தி.மு.க.

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

 ''திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) அரசாங்கத்தின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை இன்று  புறக்கணிப்போம்'' என அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க.) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

 எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை தி.மு.க. அரசாங்கம்  கையில் எடுத்துள்ளது. இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில் பழனிசாமி சட்டசபையில் குரல் கொடுத்தார்.

அதற்கு உரிய வாய்ப்பு தராமல் என்ன சொல்கிறார் என்பதை கேட்காமலேயே அடுத்த நடவடிக்கைகளை எடுத்து விட்டனர்.

பொய் வழக்கு போட்டு எங்களை அச்சுறுத்தி அ.தி.மு.க.வை நசுக்க வேண்டும் என தி.மு.க. அரசாங்கம் செயல்படுகிறது. எந்த வழக்குகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

தி.மு.க. அரசாங்கத்தின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை அ.தி.மு.க.இன்று  முழுமையாக புறக்கணிக்கும் என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X