Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மே 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தை காங்கிரஸ் கட்சியினர், கோமியம் தெளித்து தூய்மைப்படுத்திய சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்காக சட்டப்பேரவை கூட்டம் நேற்றைய தினம் தொடங்கியுள்ள நிலையில் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாட்டு கோமியம் தெளித்து பூஜை செய்துள்ளனர்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்த பிறகு முதன்முறையாக சட்டமன்ற கூட்ட தொடர் கூடியுள்ளது.
அதற்கு முன்னதாக கட்சியின் முக்கிய பிரமுகரான மனோகர் தலைமையில், புனித நீர் தெளித்து, விதான்செளதா வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பூஜை செய்தனர்.
இதன் மூலம் சட்டப்பேரவையை தூய்மைப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். எனினும் காங்கிரஸ் கட்சியினரின் இச் செயலை பாரதிய ஜனதா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
5 minute ago
29 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
29 minute ago
58 minute ago