2025 ஜூலை 19, சனிக்கிழமை

சந்திரன் “இந்து ராஷ்டிரியம்” நாடு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரோ விஞ்ஞானிகளால் நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது, கடந்த ஓகஸ்ட் 23ம் திகதி விக்ரம் லேண்டரை  நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விக்ரம் லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டரின் உட்பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி  14 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவசக்தி என பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து, அகில இந்திய இந்து மகா சபையின் தேசியத் தலைவர் சக்கரபாணி சமீபத்தில் ஒரு வீடியோவில் கூறுகையில், சந்திரனை “இந்து ராஷ்டிரியம் ” என தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனவும்,

இந்து ராஷ்டிரிய நாட்டின் தலைநகராக லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி இடத்தை அறிவிக்க வேண்டும் எனவும் இது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்து மகா சபையின் தேசியத் தலைவர் சக்கரபாணி  கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X