2025 மே 09, வெள்ளிக்கிழமை

சர்வதேச அங்கீகாரம் பெற்ற விநாயகர் சிலை

Freelancer   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 39 ஆண்டுகள் பழமையான தேங்காய் விநாயகர் என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அமைந்துள்ள சிலையானது சிறப்பு வாய்ந்த சக்தியை கொண்டிருப்பதாக போற்றப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டிரான்ஸ் ஓசனா உலக பதிவுகள் என்ற அமைப்பின் சார்பில் இந்தக் கோவிலுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஒற்றை தேங்காயில் கஜமுக விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதையும், 21 ஆண்டுகாலமாக அதில் தேங்காய் நீர் பாதுகாக்கப்பட்டு வருவதையும் கௌரவிக்கும் விதமாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விநாயகரை சித்தி விநாயகர் என்றும் அழைக்கின்றனர். இந்தக் கோவிலில் பூஜை செய்யும் மகேந்திர வியாஸ் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், “இந்தக் கோவில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. தேங்காயில் விநாயகர் உருவத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கினோம்’’ ​மேலும் விநாயகர் சிலையை தேங்காயில் வடிவமைத்த இந்த 21 ஆண்டுகளில் பற்கள், தலை, மகுடம், கண்கள், காதுகள், கழுத்து மற்றும் வாய் போன்றவை வளர்ச்சி அடைவதாகவும் ,தேங்காய்க்குள் தண்ணீர் வற்றாமல் அப்படியே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் தேங்காய் விநாயகரை தரிசனம் செய்வதற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரக போன்ற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பது குப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X