2025 மே 01, வியாழக்கிழமை

சவூதி செல்ல இந்தியர்களுக்கு தற்காலிக தடை

Freelancer   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவெள்ளை நிலையில், இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான விசாக்களுக்கு சவுதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. 

இதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளை சேர்ந்த ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு இந்த தடை விதிக்கப்படுகிறது.

வெளிநாட்டினர் பலரும் உம்ரா விசாக்கள் அல்லது வருகைக்கான விசாக்களுடன் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவுக்குள் நுழைந்து, அதிகாரப்பூர்வ அங்கீகாரமின்றி கூடுதலான நாட்கள் தங்கி, சட்டவிரோத வகையில் ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.

இதுபோன்று முறையான பதிவு செய்யாமல் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் தனி நபர்களை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சட்டவிரோத வேலைவாய்ப்பில் ஈடுபடும் செயலை தவிர்ப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .