Ilango Bharathy / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் சென்சார் தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட சப்பாத்தினை அசாமை சேர்ந்த சிறுவனொருவன் வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளான்.
கரிம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அன்குரித் கர்மாகர் என்ற சிறுவனே குறித்த சப்பாத்தினைத் தாயாரித்துள்ளான்.

9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ” கண்பார்வையற்றவர்கள் இச்சப்பாத்தினை அணிந்து செல்லும் போது எதிரே வரும் தடைகளை சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் அவர்களுக்கு சமிக்ஞை செய்யும்” என்றான்.
மேலும் ”எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்பதே தனது ஆசை” எனவும் அவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago