A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை:
மும்பை மாநகராட்சி இணை ஆணையர் ரமேஷ் பவார், தண்ணீருக்குப் பதிலாக சானிடைசரை குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி இணை ஆணையர் ரமேஷ் பவார், பேசுவதற்கு முன்பாக, மேசை மீதிருந்த கைகழுவ பயன்படுத்தப்படும் சானிடைசர் பாட்டிலை எடுத்து குடித்தார். இதனை பார்த்த உதவியாளர்கள் அவரை மேலும் குடிக்காமல் தடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷ் பவார் கூறுகையில், 'எனது உரையைத் துவங்குவதற்கு முன்பு நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மேசையில் இருந்த பாட்டிலை எடுத்து குடித்தேன். அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்களும் சானிடைசரும் ஒரே மாதிரி இருந்தன. நான் அதை குடித்த உடனே தவறை உணர்ந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடப்பது இயல்பு,' எனக்கூறினார்.
30 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
8 hours ago
9 hours ago