2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சித்ராவின் தாய், சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி மனு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

 பிரபல  தொலைக்காட்சி  நடிகை சித்ராவின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தாயார் விஜயா, முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனிப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தவர் சித்ரா. சென்னை புறநகர் நட்சத்திர ஹோட்டலில் வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த போது, மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பத்தில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாகச் சொல்லப்பட்ட நிலையில் கணவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்று கோரி, சித்ராவின் தாயார் விஜயா முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார்.

 

 

  

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .