A.K.M. Ramzy / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூலூர்:
சூலூரை அடுத்த அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது35). கூலித்தொழிலாளி. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மூதாட்டி வீட்டில் வசிக்கும் 13 வயது சிறுமியை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தெரிந்துள்ளது.
இந்த நிலையில், அந்தச் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையிலும், சதீஷ்குமார் அவரை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சிறுமி அழுதவாறு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கூறினார். இதுகுறித்து அறிந்த தனியார்அமைப்பினுடாக சூலூர் பொலிஸில் புகார் அளித்தனர்.அதன் பேரில் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
32 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
07 Mar 2026