2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுவனுடன் ஓட்டம் பிடித்த காதல் மனைவி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 31 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் அருகில் உள்ள செங்கல் சூலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘மகாலட்சுமியைக் காணவில்லை‘ என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த செங்கல் சூளையில் பணியாற்றிவந்த 17வயதுச் சிறுவனொருவனும் அதேநாளில் காணாமற்போயுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காணாமற்போன இருவரும் கன்னியாகுமாரியில் ஒன்றாக வசித்து வருவதாகப் பொலிஸாருக்குக் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் மகாலட்சுமியைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .