2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிலை அகற்றியதால் மக்கள் போராட்டம்

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாக்கியம் நகர்

கீழ்க்கட்டளை ஏரியில் அம்மன் சிலையை வைத்து பாக்கியம் நகர், தேன்மொழி நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வழிபட்டு வந்தனர். ஏரியில் இருந்த சிலையை பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான பணியாளர்கள் அகற்றி பம்மல் கருவூலத்தில் வைத்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள்  பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை கீழ்க்கட்டளையில் மறியலில் ஈடுபட்டனர்.

மடிப்பாக்கம் பொலிஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

பல்லாவரம் வட்டாட்சியரை அணுகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி அறிவுறுத்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X