Freelancer / 2024 மே 20 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவகங்கையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை வேலுநாச்சியார் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் நிதிஷ் (24). திருப்பூரில் பணிபுரிந்து வந்த இவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் ஞாயிறு இரவு தனது வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் நிதிஷை அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவகங்கை நகர் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.S
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025