2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’’சீன தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் ’’

Ilango Bharathy   / 2023 மார்ச் 07 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் தற்போது ‘விவோ, ஓப்போ, ஸையோமி, ஒன்ப்ளஸ், ஹானர், ரியல் மீ, ஜியோனி உள்ளிட்ட சீன தயாரிப்புத்  தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் ”சீன எல்லைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள், சீனாவினால் தயாரிக்கப்பட்ட தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம்” என இந்திய பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சீனாவில் தயாரிக்கப்படும்  தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும்  இத்தகைய தொலைபேசிகளில் ஸ்பைவேர் மற்றும் மால்வேர்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே இராணுவ உயர் அதிகாரிகள் சீன தயாரிப்புத் தொலைபேசிகளைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இராணுவ வீரர்களுக்கும் ‘ குறித்த தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் ‘என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .