2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சுயநினைவை இழந்தார் அமைச்சர் கவுடாவு

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர்;

மத்திய உரம் மற்றும் இரசாயனத் துறை அமைச்சராக   பணியாற்றி வருபவர் சதானந்த கவுடா. அவர் நேற்று சித்ரதுர்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மதியம் 2 மணி அளவில் உணவுக்குச் செல்லும் முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்து சுய நினைவை இழந்தார்.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த வர்கள், உடனே அவரை சித்ரதுர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டொக்டர்கள், அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து இருப்பதாக தெரிவித்தனர். உடனே அவருக்கு சர்க்கரை அளவை சரிசெய்யும் சிகிச்சையை தொடங்கினர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் சுய நினைவுக்கு வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சதானந்த கவுடா  பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்.  

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் எடியூரப்பா, மாநில பா.ஜ.க. தலைவர் நளின்குமார் கட்டீல் உட்பட அக்கட்சி தலைவர்கள்   சதானந்த கவுடாவின் உடல் நிலையை கேட்டறிந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .