Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 25 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிராவில் கிரிக்கெட் சூதாட்ட தரகரின் வீட்டில் கட்டுக்கட்டாக 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தரகர் மூலம் ஒன்லைன் சூதாட்டத்தில் 58 கோடி ரூபாய் முதலீடு செய்து இழந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, நாக்பூர் அருகே உள்ள கோண்டியா பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர் சோந்து நவரத்ன ஜெயின் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
நவரத்ன ஜெயின் வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளைக் கண்டு காவல்துறையினரே மிரட்சியடைந்தனர்.
அவற்றை கைகளால் எண்ண முடியாது என்பதால், உடனடியாக இயந்திரங்களைக் கொண்டு வந்த எண்ணி முடித்தனர்.
நவரத்ன ஜெயின் வீட்டில் இருந்து 17 கோடி ரூபாய், 4 கிலோ கிராம் தங்கம், 200 கிலோ கிராம் வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்து பெட்டி பெட்டியாக காவலர்கள் தூக்கிச் சென்றனர். இதனிடையே, சூதாட்ட தரகர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago