2025 ஜூலை 12, சனிக்கிழமை

சென்னை அழைத்துவரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை

Freelancer   / 2024 மார்ச் 18 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர் தொடர்புடைய இடங்களுக்கும் அவரை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ரூபா 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் 9ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் மன்னனும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவரை ஏழு நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோது, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் அவரது சகோதரர்களான சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்கள் இருவருக்கும் எதிராக கவன ஈர்ப்பு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டது.

இவர்கள் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே போதை பொருள் கடத்தியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், விசாரணையில் இலங்கை, மலேசியா மற்றும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் இவர்கள் போதைப்பொருள் கடத்திவந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதேவேளை, போதைபொருள் கடத்தி வந்த ஜாபர் சாதிக்கின் நண்பனான சதானந்தத்தையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையிலேயே ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களை கண்டறிவதற்காக அவரை நேற்று காலை டெல்லியில் இருந்து அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .