2025 ஜூலை 19, சனிக்கிழமை

சேவலை சிறையில் அடைத்த பொலிஸ்

Freelancer   / 2023 ஜூலை 12 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகபூப் நகர் மாவட்டம் ஜட்ஜெரலா பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாட்டுக்கோழிகளை குறி வைத்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், சேவல் திருட்டில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பொதுமக்களிடம் பிடிபட்டார்.

இதையடுத்து, சேவலுடன் அவரை அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அந்த நபரை சிறைக்குள் தள்ளிய பொலிஸார், சேவலையும் உள்ளே அடைத்தனர்.

கோழி திருட்டில் ஈடுபட்டவர் தான் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் என்றால், சேவலையும் ஏன் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சேவலை வெளியில் விட்டால் அதை யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என்பதால், பாதுகாப்பாக அடைத்து வைத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சேவலை உரியவரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X