2025 மே 09, வெள்ளிக்கிழமை

டெங்குவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரவலை  கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கமைய  டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்றைய தினம் (27) அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனையொன்றை நடத்தியுள்ளார்.

அதில், டெங்கு காய்ச்சலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் கையாளுவதற்கான தயார்நிலையை அவர் ஆய்வு செயவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் டெங்கு பரவலின் நிலை மற்றும் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளார்..

மேலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  பரிசோதனை கருவிகள் உட்பட மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெங்குவைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு, ஆய்வக பரிசோதனை, நோய் மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்ட அமலாக்கத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு போதுமான நிதியை வழங்குகிறது என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X