2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

“டிக்கெட் எடுப்போம், ஆனால் பயணிக்க மாட்டோம்”

Ilango Bharathy   / 2023 மார்ச் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

” வட இந்தியர்கள் ரெயிலில் பயணச் சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர்”என்ற வெறுப்பு பேச்சுகள் பரவிவரும்  இச்சூழலில், பயணச் சீட்டு எடுத்தும் ரெயிலில் பயணிக்காத மக்கள் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம், ப்ரக்யராஜில் தயால்பூர் என்ற பகுதியில் உள்ள புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கான காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியப் பிரதமராக நேரு இருந்த கால கட்டத்தில், அவர் ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியிடம் தயால் பூரில் ஒரு புகையிரத நிலையத்தை ஏற்படுத்தக்  கூறி வலியுறுத்தினார்.

இதனையடுத்து 1954 ஆம் ஆண்டு  குறித்த புகையிரத நிலையமும் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகள் அது செயல்பட்டது.

எனினும் 2006 ஆம் ஆண்டு  குறைந்தபட்ச வருவாயைக் கூட குறித்த புகையிரத  நிலையம் ஈட்டாத காரணத்தினால் அது மூடப்பட்டது.

இதனையடுத்து குறித்த புகையிரத நிலையத்தை திறக்குமாறு அப்பகுதி மக்கள்  நீண்டகாலமாக போராட்டம் நடத்திவந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அது மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

எனினும் அது மீண்டும் மூடிவிழா கண்டுவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் ரெயிலில் பயணிக்காமலே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .