2026 மார்ச் 07, சனிக்கிழமை

டிடிவி தினகரன் மீது பொலிஸார் வழக்கு

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 29 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சரை இழிவாகப் பேசியதாக டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் கடந்த 23ஆம் திகதி  அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "பழனிசாமி கம்பெனி காந்தி நோட்டை நம்பியே தேர்தலில் நிற்கிறது. இங்கு ஒருவர் இருக்கிறார். உண்மையைச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறது. நமது இலக்கு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதுதான். இந்தத் தொகுதியில் ரூ.200 கோடியைப் பதுக்கி வைத்துள்ளனர். இது யாருடைய பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம். பணம் உங்களைத் தேடி வரும். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்.

இன்றைக்கு பழனிசாமி கம்பெனியினர், திமுகவினரைத் தாக்கியும், திமுகவினர் பழனிசாமி கம்பெனியைத் தாக்கியும் பேசி வருகிறார்கள். ஆனால், 2 பேரையும் தாக்கிப் பேசக்கூடிய ஒரே சக்தி அமமுகவுக்குத்தான் இருக்கிறது. பழனிசாமி கம்பெனி ஆட்சிக்கு வரப்போவதில்லை. எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல், முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சரை இழிவாகப் பேசியதாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக இன்று (மார்ச் 29) புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பொலிஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .