2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’டெல்டா’ தீவிரம் ; தடுப்பூசி தட்டுப்பாடு!

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 07 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆவது அலையின் பின்,இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் டெல்டா வைரஸ், 3ஆவது கொரோனா அலை வர உள்ளதாகப் பல முக்கிய கணிப்புகள் வெளியாகியுள்ளன.

 சமீபத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், இந்தியாவில் 3 ஆவது கொரோனா தொற்று அலை ஜூலை 2ஆவது வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடையும் எனத் தெரிவித்திருந்தது. முதல் அலை, 2 ஆவது அலையைப் போராடிக் கடந்துள்ள இந்தியாவில் 3 ஆவது அலை வர உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கன்டி கோஷ், இந்தியாவில் 3ஆவது அலை பாதிப்பைக் குறைக்கவும், 3ஆவது அலையில் இருந்து தப்பிக்கவும் தடுப்பூசி மட்டுமே தீர்வு என்று கூறியுள்ளார். உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்த நிலையிலும், மத்திய அரசாங்கம் முன்கூட்டியே திட்டமிட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.

தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க ஒன்றிய அரசாங்கம் அடுத்தடுத்து புதிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்து வெளிநாட்டில் இருந்து தடுப்பூசியினை இறக்குமதி செய்வது மட்டும் அல்லாமல் உள்நாட்டிலும் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X