A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 06 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
விவசாயிகள் 6ஆம் திகதி டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டபடி மறியல் போராட்டம் இல்லை என போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சம்யுக்த் கிசான் மோர்ச்சா நேற்று திடீரென அறிவித்தது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அறிவிக்கப்பட்டபடி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மறியல் போராட்டம், அமைதியான முறையில் நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் தங்களுக்கு எதிரானவை என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. குறிப்பாக, இந்த சட்டங்கள் தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வைத்து விடும்,
குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு வேட்டு வைத்து விடும் என்று கருதி, அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago