2026 மார்ச் 04, புதன்கிழமை

டேட்டிங் ஆப் மூலம் பண மோசடி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பல் Blued என்ற தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப்-ல் போலி ஐடி உருவாக்கி, நட்பு அடிப்படையில சாட் செய்வார்கள். பின்னர், தன்பாலின உடலுறவில் விருப்பம் உள்ளதா? எனக்கேட்பார்கள். அப்படி விருப்பம் இருக்கிறது என சாட் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்வார்கள். அப்படி வரும்போது, அவர்ளுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். அதை மற்றொருவர் மூலம் வீடியோ எடுத்துக் கொள்வார்கள்.

பின்பு அந்த நபரிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துவிடுவார்கள். மேலும், உடலுறவில் ஈடுபட்டதை வீடியோவாக படம் எடுத்து வைத்துள்ளோம். அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டல் விடுத்து பணம் பறித்துக்கொள்வார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் பொலிஸார் புகார் அளிக்க, அதன்அடிப்படையில் பொலிஸார் இந்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து பொலிஸார் ஐந்து அலைபேசிகள், மடி கணினி, வங்கி தன்னியக்க அட்டைகள் ஒன்பது ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .