A.K.M. Ramzy / 2021 ஜனவரி 04 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசியாபாத்
உத்தரப் பிரதேசத்தில் தகன மேடைக் கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் நடந்த இக்கோர சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காசியாபாத் காவல் கண்காணிப்பாளர் ஈராஜ் ராஜா கூறியதாவது:
முராத்நகரில் உள்ள தகன மைதானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ராம் தண் என்பவரின் சடலத்தை எரியூட்டுவதற்காக அவரது 25க்கும் மேற்பட்ட உறவினர்கள் சென்றிருந்தனர்.
திடீரென மழை பிடித்துக்கொண்டதால் அவர்கள் அனைவரும் அருகில் இருந்த தகன மேடையருகே தஞ்சம் புகுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தங்குமிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந் தனர்.
பல மணிநேரங்கள் கழித்து, பலியானவர் களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சென்று பல உடல்களை மீட்டெடுத்தனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிர் இழப்பு குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.
32 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
07 Mar 2026