2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தட்டிக்கேட்ட சாரதி மீது தப்பான புகார்

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு  மடிவாளா   பகுதியில்  இளம் பெண்ணொருவர்  தனது  நண்பர்கள் 3 பேருடன்  வெளியில் செல்வதற்காக வாடகை கார் ஒன்றை பதிவு செய்து பயணித்துள்ளனர். இளம் பெண்ணும், அவரது நண்பர்களுக்கும் காரில் இருந்தவாறே புகைப்பிடித்தமையால்  சாரதி உடனே காரை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் மற்றும் நண்பர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ​பொலிஸார் விசாரணை நடத்திய போது தனக்கு சாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் கூறியுள்ளார்., பெண் உட்பட 4 பேரும் காரில் புகைப்பிடித்ததாக  கார் சாரதி புகார் அளித்தார். 2 பேரிடமும் பொலிஸார் தனித்தனியே புகாரை பெற்று கொண்டு   விசாரணை  நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X