2025 மே 08, வியாழக்கிழமை

தண்ணீர் கேட்டவர் அடித்து படுகொலை

Janu   / 2024 ஜூன் 12 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நள்ளிரவில் தண்ணீர் கேட்டு தொந்தரவு செய்த நபரை பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்த சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

புனேவின் முந்த்வா பகுதியில் ஒருவர் தனியாக வசித்து வந்தார். அவருக்கு மதுபழக்கம் உள்ளது. இதனால்,பக்கத்து வீட்டுக்காரருடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.

இதற்கிடையில், மதுபழக்கம் உள்ளவர் நள்ளிரவில் தண்ணீர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பொருத்துக்கொள்ள முடியாத பக்கத்துவீட்டுக்காரர்,   இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.  அதில் படுகாயமடைந்த நபர், அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

விடயத்தை கேள்வியுற்று விரைந்த பொலிஸார், பக்கத்துவீட்டுக்காரரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X