2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தந்தை கொத்தியதில் மகன் மாண்டார், திருமண வீடு மரண வீடானது

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 12 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை:

திருமணம் ஆயிரக்காலத்து பயிர் என்பர், ஆனால் அந்தப் பயிரை வேலியே மேய்ந்துவிடும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது தற்போது வழமையாகிவிட்டது.

அவ்வாறானதொரு சம்பவம்தான் மதுரை வாடிப்பட்டி அருகே நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

திருமணம் முடிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய மகன் என்றும் பார்க்காமல், கோடரியால் கொத்தி சாய்த்த, அவரது தந்தை, “குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால், கோடரியை எடுத்து கொத்தி சாய்த்துவிட்டேன்” என அசால்டாக பொலிஸாரிடம் தெரிவித்து, சரணடைந்துள்ளார்.

தந்தை இளங்கோவனுக்கும், அவரது மகன் பிரதீப்புக்கும் இடையில், சொத்து விவகாரம் தொடர்பில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாகும்.

இன்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தனது உறவுக்கார சிறுமியை அழைத்துவந்த பிரதீப், அச்சிறுமியை திருமணம் செய்துகொண்டார். 17 வயதான சிறுமியை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரதீப், பின்னர் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அச்சிறுமிக்கு 19 வயதாகிவிட்டதால், இருவீட்டாரின் சம்மதத்துடன், மணமகன் வீட்டிலேயே   திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்றையதினம் அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், தந்தையும் மகனும் போதையில் இருந்துள்ளனர். மீண்டும் சொத்துவிவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறிவிட்டது.

கையில் கி​டைத்த கோடரியை எடுத்து, தனது மகன் என்றுக்கூட பார்க்காது, அவருடைய தந்தை இளங்கோவன்,டக்கென கொத்திவிட்டார். இதில், மகன் பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இதனால் திருமண வீடு, மரணவீடாது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், “தனது மகனை, கோடரியில் தானே கொத்தி சரித்துவிட்டேன்” என, அவருடைய தந்தை பொலிஸில் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனத் தெரிவித்த  வாடிப்பட்டி பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X