Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 17 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி, கல்லறை அருகிலேயே இரண்டு அறைகள் கட்டி ரோசி என்ற இந்த மூதாட்டி வசித்து வந்துள்ளார்.
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரோசி (வயது 70). திருமணமாகாத இவர், தனியாக வசித்து வந்தார். 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதற்கிடையில், இறந்து போன ரோசி தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, 2016ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. கல்லறை அருகிலேயே இரண்டு அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .