2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

தப்பி ஓடிய தேர்தல் அதிகாரிகள்!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கூடலூர் ஒன்றியம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை சோளிங்கர்  மையத்தில் நேற்று இரவு பதினொரு மணிக்கு நடந்தது. அதில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) வேட்பாளர் கீதா தமிழ்வாணன் 12ஆவது வார்டு 60 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 ஆனால், இது செல்லாது மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் யமுனா பிரகாஷ் கூறினார். இதை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே தகராறு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பொழுது திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை அங்கேயே ஓட ஓட விரட்டிச் சென்று தாக்கினார். இதைப்பார்த்த தேர்தல் அலுவலர்கள் தப்பி ஓடிவிட்டனர். 30நிமிடம் அப்பகுதி போர்க் களமாக மாறியது. பொலிஸார்  இருதரப்பினரையும் விரட்டியடித்தனர். இதனால், அங்கு பதட்டம் நிலவியது. இன்னும் பலரது வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் அங்கு பொலிஸ் பாதுகாப்பு   போடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .