2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்தில் வேகமாகப் பரவும் நெல் பழநோய்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 07 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

   கோவை

வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிரில் பழநோய் பாதிப்பு ஏற்பட உள்ளது.

இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறைத் தலைவர் கா.கார்த்திகேயன், விவசாயிகளுக்கு ஆலோசனை களை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

''நெல் பழ நோயானது, அஸ்டிலாஜீனாய்டியா என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. சாதாரணமாக நெற்கதிர்களின் ஒருசில நெல் மணிகளில் இது தென்படும். பாதிக்கப்பட்ட நெல்மணிகள் நிறம் மாறி, பந்து போல் 1 செ.மீ. சுற்றளவுக்கு வளரும்.

நெல் மணிகள் முதிர்ச்சியடையும்போது, மஞ்சள் நிறமானது கரும்பச்சை நிறமாக மாறிவிடும். இந்நோய் வேகமாகப் பரவி, நெற்பயிரில் கணிசமாக மகசூல் இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அஸ்டிலாஜீனாய்டியா பூஞ்சாணமானது, பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களையே வெகுவாகத் தாக்கும். அதிக மழை, காற்றில் ஈரப்பதம் போன்றவை இந்நோய் பரவச் சாதகமாகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .