2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

தலாய் லாமாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

Freelancer   / 2022 ஜூலை 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் 87ஆவது பிறந்தநாள் நேற்று (06) கொண்டாடப்பட்டது.  இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தலாய் லாமாவை தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

இதுதொடர்பில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

'திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் 87ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்' என்றுள்ளது. தலாய் லாமா, 1959 ஆம் ஆண்டு சீனாவை விட்டு வெளியேறி, இந்தியாவில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .