Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 02 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பக்தர் ஒருவரின் தலையில் தீயிட்டு பெங்கல் வைத்த விநோத சம்பவம் கடலூரில் இடம்பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோயிலில் மாசி மாதத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவதாகவும் இதன்போது 5ஆம் நாள் திருவிழாவில் சாமி வீதியுலா வரும் வேளை, பக்தர் ஒருவர் தலையில் மண்ணெண்ணெய்யில் நனைக்கப்பட்ட துணியை வைத்து அதில் தீவைத்து விடுவதாகவும், அதன் பின்னர் பக்தர் தலையில் எரியும் நெருப்பின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரிசி, வெள்ளம் போட்ட பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த பொங்கலை வீதியுலா வரும் சாமிக்கு படைத்து உடல் நிலைப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரசாதமாகத் தருவதாகவும், இதன் போது அதனை உண்பவர்களின் உடல் நலம் குணமடைவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
13 minute ago
14 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
14 minute ago
24 minute ago