2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தள்ளிநில் ஹிந்தியே -வைரமுத்து

Ilango Bharathy   / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் நாட்டில் ‘நடராசன்,  தாளமுத்து, ராஜேந்திரன், சாரங்கபாணி ‘எனப்  பலர், ஹிந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களை நினைவு கூறும் வகையில் ‘மொழிப்போர் தியாகிகள் தினம்‘ நேற்றைய தினம்  அனுசரிக்கப்பட்டது.

அந்த வகையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ”மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்…கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு ...தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான்… தேகங்கள் அணைந்துவிட்டன…தீ அப்படியே… செந்தீயைத் தீண்டாதே… தள்ளிநில் ஹிந்தியே...” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .