Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூலை 11 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மல்லிகைப்பூவுக்கு பிரசித்திப்பெற்ற மதுரையில் 'மல்லிகை டே' கொண்டாட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரை செய்தும் இதுவரை தோட்டக்கலைத்துறை ஆண்டுதோறும் 'மல்லிகை டே' கொண்டாடவில்லை.
மல்லிகைப்பூக்கள் தமிழகம் முழுவதும் உற்பத்தியானாலும் மதுரை மல்லிகைக்கு உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை ஆண்டு முழுவதும் வரவேற்பு உண்டு. அதனால், மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மல்லிகைப்பூதான்.
மதுரை மண்ணில் கந்தக சத்து காணப்படுவதால், மற்ற மாவட்டங்களில் விளையும் மல்லிகைப்பூவை விட மதுரை மல்லிகைக்கு மணமும், நிறமும் அதிகம். பார்க்க அழகாக பருத்து உருண்டையாக வெண்மையான நிறத்தில் 'பளபள'வென இருப்பது மதுரை மல்லிகைக்கு தனி சிறப்பு.
மற்ற ஊர்களில் விளையும் மல்லிகைப் பூக்கள் விரைவாக வாடிவிடும். ஆனால், மதுரை மல்லிகைப்பூக்கள் நெருக்கமான இதழ்களை கொண்டுள்ளதால், எளிதில் வாடிபோகாது. இரண்டு நாள்கள் வரை வாடாமல் இருக்கும்.
மதுரை மல்லிகைப்பூக்கள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மதுரை மல்லிகையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், இந்த பூக்களை அழியாமல் தடுக்கவும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தற்போது 2,500 ஹெக்டேரில் மல்லிகைப்பூ பயிரிடப்படுகிறது. 3 ஆயிரம் குடும்பங்கள், இந்த மல்லிகைப்பூ சாகுபடியில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டுள்ளனர். 3 ஆயிரம் குடும்பத்தினர் குடிசைத்தொழில் போல் மல்லிகைப்பூக்களை விவசாயிகளிடமும், வியாபாரிகளிடம் வாங்கி மாலை கட்டி விற்பனை செய்கின்றனர்.
அதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் மல்லிகைப்பூ சாகுபடியில் வர்த்தக பரிமாற்றமும், நிரந்தர வேலைவாய்ப்பும் இந்த மாவட்ட மக்கள் பெற்றுள்ளனர். இந்த பூ சாகுபடியில் கோடை காலத்தில் மகசூல் அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் மொட்டுகள் கருகி மகசூல் குறையும்.
மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் புவிசார் குறியீடு மட்டும் பெற்றால் போதாது, மல்லிகைக்கு புகழ் பெற்ற மதுரையில் ஆண்டுதோறும் 'மல்லிகை டே' கொண்டாட தோட்டக்கலைத்துறைக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 3 ஆண்டுக்கு முன் பரிந்துரை செய்தது.
ஆனால், தற்போது வரை மதுரை மல்லிகைப்பூவை பெருமைப்படுத்தும் வகையில், தோட்டக்கலைத்துறை இதுவரை 'மல்லிகை டே' கொண்டாடவில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago