2026 மார்ச் 07, சனிக்கிழமை

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் பாஜக வேட்பாளரின் பிரசார வாகனத்தை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.   பிரசார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி  சைந்தியா பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தை இரவு முற்றுகையிட்ட பிரியா ஷா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்குகிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச்சேகரிப்பின் போது கட்சிகளுக்கு இடையே மோதல்களும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், அம்மாநிலத்தின் பிரம்பு மாவட்டம் சைந்தியா தொகுதி பாஜக வேட்பாளரான பிரியா ஷா நேற்று பிரசாரத்தை முடித்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் கட்சி அலுவலகம் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பிரியா ஷா-வின் பிரசார வானத்தை குறிவைத்து இனந்தெரியாத நபர்கள் சிலர் கற்களை வீசியும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாஜக வேட்பாளரின் பிரசார வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தன.

இந்நிலையில், தனது பிரசார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியுடன் சைந்தியா பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தை   இரவு முற்றுகையிட்ட பிரியா ஷா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தனது ஆதரவாளர்களுடன் பொலிஸ் நிலைய வாசல் முன் தர்ணாவில் ஈடுபட்டு வரும் பிரியா ஷா, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இங்கேயே அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என பிரியா ஷா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .