Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மே 05 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தியில் ராம் ஜானகி மடத்தின் தலைவர் துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது இரண்டு சீடர்களுடன் ஏப்ரல் 27 இல் ஆக்ரா வந்திருந்தார். இவர், இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் அமைத்து, முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி இரு முறை அயோத்தியில் உண்ணாவிரதமும் இருந்தவர்.
பரமஹன்ஸுக்கு, தம் கையிலிருந்த இரும்பாலான பிரம்ம தண்டத்துடன் தாஜ்மஹால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அயோத்திக்கு திரும்பியவர் நேற்று(5) தாஜ்மஹாலினுள் சாதுக்கள் சபையை நடத்தி, அதை புனிதப்படுத்த உள்ளதாக அறிவித்தார். இதற்காக தமது சீடர்கள் அனைவரும் தாஜ்மஹாலுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் தாஜ்மஹாலின் மசூதியினுள் நேற்று முன்தினம் (03) நடந்த ரம்ஜான் தொழுகையின் போது பரமஹன்ஸ் மீண்டும் ஆக்ரா வந்தார். காலை 8 மணிக்கு தாஜ்மஹாலுக்குள் நுழைய முயன்ற அவரை நண்பகல் 12 மணிவரை பொலிஸார் பேசி சமாதானப்படுத்தி திருப்பி அனுப்ப முயன்றனர்.
இது முடியாமல் போகவே, கைது செய்யப்பட்ட பரமஹன்ஸ், ஆக்ரா அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டார். இவருடன் இரு சீடர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
43 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
3 hours ago