Ilango Bharathy / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயதான இளைஞன் ஒருவன் அங்குள்ள பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளான்.
குறித்த இளைஞனின் தாயார், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து சிறிது காலம் தனியாக வசித்து வந்துள்ளார். இதன்போது அவருக்கும் கார்த்திக் என்ற 32 வயதான நபருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் அப்பெண் மீண்டும் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். எனினும் வீட்டில் யாரும் இல்லாத வேளைகளில் கார்த்திக்கை வரவழைத்து அவருடன் தனிமையில் பொழுதை போக்கிவந்துள்ளார்.
நாளடைவில் இவ்விவகாரம் குறித்துத் தெரியவரவே ஆத்திரம் அடைந்த குறித்த இளைஞன் தனது தாயுடனான தொடர்பை கைவிடும்படி கார்த்திக்கிடம் கூறியதுடன், இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது எனவும் கண்டித்துள்ளான்.

அத்துடன் தனது தாயாரையும் கண்டித்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக்,குறித்த இளைஞனைக் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச்சென்றுள்ளார்.
இதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
அதேசமயம் கார்த்திக்கைக் கைதுசெய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago