2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தாலியை விழுங்கிய எருமை

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பெண் ஒருவர் குளிக்கச் செல்லும் முன்பு தாலி சங்கிலியை கழற்றி, உணவுத் தட்டு ஒன்றில் மறைத்து வைத்துள்ளார். அதனை மறந்த அவர், எருமைமாட்டிற்கு அதே தட்டில் உணவு வைத்துள்ளார். அப்போது உணவோடு உணவாக தாலி சங்கிலியையும் அந்த எருமைமாடு விழுங்கியுள்ளது.

சிறிது நேரத்திற்கு பிறகு தாலி காணாமல் போனதை உணர்ந்த அப்பெண் வீடு முழுவதும் தேடியுள்ளார். அதன் பிறகே, மாட்டிற்கு உணவு வைத்த தட்டில் தாலியை வைத்திருந்தது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்த கால்நடை மருத்துவர், எருமையின் வயிற்றில் தாலி இருப்பதை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு எருமையின் வயிற்றில் இருந்து தாலி சங்கிலி மீட்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X