A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிருஷ்ணகிரி
அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், கட்சியில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் இல்லாத சசிகலா கட்சியின் கொடியை, அவர் பயணித்த காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
சசிகலாவை ஏன் அதிமுகவை விட்டு நீக்கவில்லை என சில கருத்து கூறுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உறுப்பினர் புதுப்பிப்பு பணி நடைபெற்றது. அப்போதும் கூட சசிகலா தன்னை புதுப்பித்து கட்சி உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. ஆகவே, கட்சியிலேயே இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும்.
அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்து தன்னை கட்சியில் இணைக்கக் கோரினால் வேண்டுமானால், அவரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தலைமை பரிசீலனை செய்யும்.
பரிசீலனை முடிவை ஏற்பதாக இருந்தால் அவரை ஏற்றுக் கொள்ளலாம். தகுதியற்ற நபர் என முடிவு செய்யப்பட்டால் அவரது மன்னிப்புக் கடிதம் குப்பைத் தொட்டிக்குத் தான் செல்லும் என்றார்.
54 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago