2026 மார்ச் 05, வியாழக்கிழமை

தினமும் குப்பையில் கொட்டப்படும் 10 தொன் காய்கறிகள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 29 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் கோயம்பேடு சந்தையில் தினமும் சராசரியாக 10 தொன்  அளவிலான காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி லொறிகளின் வருகை  100 முதல் 120வரை அதிகரித்து உள்ளது.

இதனால் காய்கறி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன. ஆனாலும் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் எதிர்பார்த்த அளவுக்கு காய்கறி விற்பனை ஆகவில்லை.

இதனால் தக்காளி, கத்தரிக்காய், கேரட், அவரைக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் தினசரி தொன் கணக்கில் தேங்கி வீணாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 10 தொன் காய்கறிகள் குப்பைகளில் கொட்டப்பட்டு வருவதாகவும் இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகள் விலை கிலோ 10 ரூபாவுக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .