A.K.M. Ramzy / 2021 ஜனவரி 31 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரணியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியால் இரண்டு மாதங்களாக கிடைத்தாத அரசின் நிவாரண உதவி, பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்குக்கு இரவு நேரத்தில் அனுப்பியுள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கத்தில் திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (30)மாலை நடைபெற்றது.
இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, ‘‘திமுக தனி மனித இயக்கம் அல்ல. திமுக தமிழர்களின் இயக்கம், தமிழர்களுக்கான இயக்கம். தமிழினத்துக்கான, தமிழர்களின் மேன்மைக்கான, தமிழர்களின் வளர்ச்சிக்கான இயக்கம்.
தமிழர்களை மானமுள்ள, மொழிப்பற்றும், இனப்பற்றும் உள்ளவர்களாக வளர்க்க நினைத்தார் பேரறிஞர் அண்ணா. இந்தியாவிலே வளர்ச்சி பெற்ற மாநிலமாக தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்க பாடுபட்டார் கருணாநிதி.
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நீட் தேர்வில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக அதிமுக அரசு மாற்றிவிட்டது.தொழில் துறையில் முன்னேறிய தமிழ்நாட்டை 14ஆவது இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
நிம்மதியாக இருந்த விவசாயிகளை விரட்டும் அரசாக மாறிவிட்டது. வேலையில்லாதவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக இந்த அரசு மாற்றிவிட்டது. கழகம் உருவாக்கிய தமிழகத்தை உருக்குலைக்க ஒருகாலும் நாம் விடமாட்டோம் என்றார்.
16 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
8 hours ago
9 hours ago