2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’ தியாகிகளுக்குத் தலை வணங்குகிறேன்’

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

'சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்ந்து, தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன்'என டெல்லி செங்கோட்டையில்  தேசிய கொடியேற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே இவ்வாறு  தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் சுதந்திர தின உரையின்போது தெரிவித்தானது;

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் நினைவு கூர்வோம். தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். நாட்டு பிரிவினை அனைவருக்கும் வேதனை தந்தது. கொரோனா ஒழிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவிப்போம். கொரோனா தடுப்பூசி நமது நாட்டில் தயாரிக்கப்பட்டதால், பலரும் இன்று பலன் அடைந்துள்ளனர். சப்கா ஷாத் சப்கா விகாஸ் என்ற முழக்கத்தின்படி நாட்டில் அனைவரது வளர்ச்சியே நமது இலக்கு. இதற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

புரட்சிக்கும், புதுமைக்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். இது உலக அளவில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதுடன் இந்தியாவை பெருமை பெற செய்யும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X