Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 24 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணத்தை திருட வந்த இடத்தில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
முல்லா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளோடு 10 வருடங்களாக சென்னை தண்டையார் பேட்டை வ.உ.சி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பக்கத்து வீட்டில் வசித்து வரும் மகேஷ்குமார் என்ற இளைஞர் பால்கனி வழியாக சுவர் ஏறி குதித்து முல்லாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அப்போது அவர் டேபிள் மீது வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார். பின்னர் குழந்தைகளோடு படுத்திருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அப்பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
முல்லா எழுந்து பார்த்த போது மகேஷ் குமார் அங்கிருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மகேஷ்குமாரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இரவு நேரத்தில் திருட வந்து, பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 minute ago
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
2 hours ago
2 hours ago