Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 07 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, திங்கட்கிழமை (04) பக்தர்கள் ஆறு கோடி பத்தொன்பது இலட்சம் இந்திய ரூபாய்களை உண்டியல் காணிக்கையாகச் செலுத்தி உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அதிகபட்சமாக ரூபாய் 5.73 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். இதுவே, இதுவரை அதிகபட்சமான ஒரு நாள் உண்டியல் வருவாயாக இருந்தது.
இந்நிலையில், 04ஆம் திகதி, உண்டியலில் பக்தர்கள் ரூ.6.19 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ஒரு பக்தர் ஒரே கட்டாக ரூ.1.64 கோடியை காணிக்கையாக செலுத்தி இருந்தார்.
இவர் ஒவ்வோர் ஆண்டும் இதுபோல் அதிக தொகையை காணிக்கையாக செலுத்தி வருகிறார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .