Ilango Bharathy / 2023 ஏப்ரல் 06 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது முன்னால் காதலியின் திருமணத்திற்குச் சென்ற நபர் ஒருவர், பரிசுப் பொருளில் வெடிகுண்டு வைத்துப் பரிசளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கபீர்தம் மாவட்டத்தைச் சேர்ந்த சர்ஜூ என்ற நபரே இவ்வாறு தனது காதலிக்கு வெடி குண்டு வைக்கப்பட்ட ஹோம் தியட்டர் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று குறித்த பரிசுப் பொருளை புது மாப்பிள்ளை திறந்துள்ள நிலையில் அது வெடித்து புது மாப்பிள்ளையும் அவரது சகோதரரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குண்டுவைத்த நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணையில் ”தனது முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காரணத்தினாலேயே ஆத்திரத்தில் இவ்வாறு செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
54 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
01 May 2026