2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திருமண நிகழ்வில் புதிய மாற்றங்கள்

Freelancer   / 2023 ஜனவரி 30 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பெரிய மாநிலங்களில் உத்தர பிரதேசம் முக்கிய மாநிலமாக உள்ளது. பாரம்பரியம், கலாசாரத்துக்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் நடைபெறுகிறது. இதில் ஆண்டுதோறும் மாற்றங்கள் இடம்பெறுவது உண்டு.

அந்த வகையில் கடந்த நவம்பரில் தொடங்கிய திருமணக் காலத்தில் வர்ணனையாளர்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளனர். வழக்கமாக விழா மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும் இவர்கள் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளனர்.

உ.பி. திருமணங்களில் கையில் ஒலிபெருக்கியுடன் ஆண் அல்லது பெண் வர்ணனையாளரை பார்க்க முடிகிறது. சில திருமணங்களில் இருவரும் கூட மாறி, மாறி நிகழ்ச் சியை தொகுத்து வழங்குகின்றனர். மேடையில் மணமக்களை வாழ்த்த வரும் விருந்தினர்கள் பற்றியும் இவர்கள் சில வார்த்தைகள் கூறி மகிழ்விக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .