Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜெய்யின் ‘தமிழன்‘ திரைப்படப்பாணியில் நபர் ஒருவர் பஸ் நடத்துனர் மீது வழக்குப் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான குறித்த திரைப்படமானது குடிமக்களின் அடிப்படைச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இப்படத்தில் ஒரு காட்சியில் பஸ்ஸில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு மீதி சில்லறையைத் தராமல் நடத்துனர் அலட்சியம் செய்வார். உடனே அந்த நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரப்படும்.
அதேபோன்ற ஒரு சம்பவம் தான் அண்மையில் பெங்களூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
‘ரமேஷ் நாயக்‘ என்பவர் தான் இது தொடர்பான மனுவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில் ” நடத்துனரிடம் 30 ரூபாய் கொடுத்து 29 ரூபாய் பயணச்சீட்டைப் பெற்றுகொண்டதாகவும், ஆனால் நடத்துனர் 1 ரூபாய் மீதமாகத் தர மறுத்துள்ளார் எனவும், இதற்கு இழப்பீடாக 15,000 ரூபாய் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு 2,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்திடம் உத்தரவிட்டுள்ளது.
21 Jul 2025
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jul 2025
21 Jul 2025