Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 15 , பி.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிமையாளரை கட்டிப்பிடித்து தேம்பி, தேம்பி ஆடொன்று அழுத சம்பவம் தொடர்பில் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
'ஈரக்குலையே' நடுங்கி போச்சு ஆட்டின் உரிமையாளரும் தெரிவித்துள்ள அந்த வீடியோவை பார்ப்போரின் இதயத்தையும் அந்தக்காட்சிகள் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றது.
பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக பார்க்கப்படும். கடந்த 13 ஆம் திகதி பக்ரீத் பண்டியாகும். கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை ஜரூராக நடந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் கவுசர்பாக் சந்தையில் ஆடு ஒன்று ரூ.8 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல, இந்த 2 நாட்களாக ஒரு ஆடு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
இது எந்த ஊரில் நடந்தது என்று தெரியவில்லை. குர்பானிக்காக இந்த ஆட்டை விற்பதற்காக, அதன் உரிமையாளர் சந்தைக்கு அழைத்து வந்தார். விலைபேசி பணத்தையும் பெற்றுக்கொண்டார். பணம் கொடுத்தவர் ஆட்டை கிளப்பிக்கொண்டு போக முயன்றார்.
அப்போது திடீரென உரிமையாளரை கட்டிப்பிடித்த ஆடு, கதறியழ ஆரம்பித்துவிட்டது. அந்த ஆட்டை சமாதானப்படுத்த உரிமையாளர் முயற்சித்த போதும் அது முடியவில்லை. விக்கிஇ விக்கி அழுத ஆடு, அழுகையை நிறத்தவே இல்லை.
சந்தையில் இருந்தவர்களும் கண்கலங்கினர், உரிமையாளரும் கண்கலங்கினார். பணத்தை கொடுத்தவரிடமே மீளவும் பணத்தைக் கொடுத்த உரிமையாளர் ஆட்டை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
9 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
28 Jul 2025