A.K.M. Ramzy / 2021 மே 19 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜெனிவா
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கான கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் கடந்த ஒரு வாரத்தில் 48 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 86 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் பாதிப்பு 12 சதவீதமும், உயிரிழப்பில் 5 சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த வாரத்தில் புதிதாக 23 இலட்சத்து 87 ஆயிரத்து 663 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு என்பது 16ஆம் திகதியுடன் முடிந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். உலக நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 13 சதவீதம் குறைந்துள்ளது.
15 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
50 minute ago
1 hours ago