Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகாரில் சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கைதி ஒருவர் தொலைபேசியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் அடைக்கப்படிருந்த கைஷர் அலி ( Qaishar Ali ) என்ற கைதிக்கு அண்மையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் தொலைபேசி ஒன்று இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ” சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்ததால் பதற்றத்தில் தான் தொலைபேசியை விழுங்கியதாகத்” தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கைஷர் அலியின் வயிற்றிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் தொலைபேசி அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .